Ads

exclusivemails.net

Sunday, February 21, 2010

உலகில் முதல் முறையாக 3-டி நேரடி ஒளிபரப்பு


சம்பவங்களை உயிருள்ள வகையில் காட்டுவதால் திரைக்காட்சிகளுக்கு எப்போதும் ஒரு தாக்கம் உண்டு. அதில் 3-டி எனப்படும் முப்பரிமாணத்தில் காட்சிகளை பார்த்தால் பிரமிக்க வைக்கும்.
சமீபத்திய `அவதார்’ சினிமா படம் வசூலில் சக்கைபோடு போடுவதற்கு முக்கிய காரணம் 3-டி காட்சிகள்தான்.

குழந்தைகள், பெரியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கவரும் 3-டி காட்சியில், ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ரசித்தால் எப்படி இருக்கும். பிரமிக்க வைக்கும்தானே! ஆம், அந்த அதிசயம் நடத்திக் காட்டப்பட்டுவிட்டது.

இங்கிலாந்தில் இந்த வெற்றிகரமான முயற்சி நடந்தது. அங்கு சமீபத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. ஜனவரி 31-ந்தேதி ஆர்சனால் – மான்சென்ஸ்டர் அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி நடந்தது. பால்கெல்லி என்ற இடத்தில் உள்ள ரெயில்வே பொதுவிடுதி மைதானத்தில் இந்த விளையாட்டு நடந்தது. போட்டியை 3-டி காட்சிகளாக ஒளிபரப்ப ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

போட்டி தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமாக இருந்தது. வீரர்கள் பந்தை உதைப்பதும், லாவகமாக கடத்திச் செல்வதும் 3-டி காட்சிகளில் தத் பமாக அமைந்திருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்தது.

அனேக ரசிகர்கள் விளையாட்டை நேரடியாக ரசிப்பதைவிட திரையில் 3-டி காட்சியாக ரசிப்பதே மிகவும் சுவாரசியமாக இருந்ததாக தெரிவித்தனர். டேவிட் என்ற 71 வயது ரசிகர் கூறும்போது, `நான் 60 ஆண்டு களாக போட்டிகளை ரசித்து வருகிறேன். ஆனால் இந்தப் போட்டியே சிறப்பாக இருந்தது. 3-டி காட்சிகள் ஒவ்வொரு `ஷாட்’களையும் அருகில் இருந்து பார்ப்பதுபோல் வியக்கும் வகையில் காட்டி எங்களை மயக்கி ஈர்த்துவிட்டது’ என்றார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விளையாட்டு அதிகாரிகள் பல்வேறு விளையாட்டுகளையும் 3-டி வடிவில் ஒளிபரப்பும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
Download As PDF

1 comment:

DREAMER said...

ஹரி,
சூப்பர் தகவல்கள்... விளையாட்டை 3Dயில் நினைத்துப் பார்க்க ஆவலாகத்தான் இருக்கிறது. நம்மூரிலும் இப்படி எப்போது நடக்குமோ தெரியவில்லை...

ஒரு சின்ன விஷயம், உங்கள் ஸ்க்ரீனின் இடதுபுறம் இருக்கும் Livestream Video, உங்கள் பதிவை மறைத்துக் கொண்டிருக்கிறது. முழுதாய் படிக்க முடியவில்லை. பதிவை காப்பி செய்து wordpadல் போட்டுத்தான் படிக்க முடிந்தது. அந்த livestream videoவின் Sizeஐ சின்னதாக்கிவிட்டால் நன்றாக இருக்கும். சாரி ஜஸ்ட் சஜஷன்தான்...

-
ட்ரீமர்

Popular Posts