Ads

exclusivemails.net

Tuesday, March 23, 2010

பாரதியின் கனவுகளில் ஒன்று


பாரதியின் தேசிய கீதங்கள் பாடலில் பாரததேசம் பாடல் பகுதியில், ‘வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் அடிமேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்...’

தீபகற்ப இந்தியாவில், ‘மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என மேலைக் கடலை மட்டும் பாரதி குறிப்பிட்டுப் பாடிய காரணம் என்ன?

கீழைக் கடற்கரையை ஒட்டியமைந்த பல துறைமுகங்கள் செயற்கைத் துறைமுகங்கள் மேலைக் கடற்கரையை ஒட்டியமைந்தவை இயற்கைத் துறைமுக ங்கள். எனவே ஆழமான இயற்கைத் துறைமுகங்கள் கொண்டது என்ற பொருளில் ‘அடி மேலைக்கடல்’ என்று சொல்லியிருக்கலாம்.

கடலின் அடிவரை சென்று பார்த்தான் எனில், கடலின் ஆழத்தினைத்தான் நாம் நினைப்போம். அடிமுதல் முடிவரை என்றால், முழுமையாக என்று பொருள். கடலை ஆளுகை செய்வது முழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் பாரதி எனலாம்.

இந்தக் கடலை ஆள்வதற்கே பிரஞ் சுக்காரரும், ஆங்கிலேயரும், டச்சுக்காரரும், போர்த்துக்கீசியரும் போட்டியிட்டனர். இவர்கள் ஆளுகை செலுத்திய மேலைக்கடல் முழுவதும் இனி இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட வேண்டும் என பாரதி கனவு கண்டார் எனலாம். பாரதி மேலைக்கடல் முழுவதையும் இந்தியா ஆளவேண்டும் என்றே “அடி மேலைக்கடல் முழுதுங் கப்பல் விடுவோம்” என்றாரா? இருக்கலாம்.

இன்னொன்று ஆழ்வார்களின் பாசுரங் களில் பேரீடுபாடு கொண்டவர் பாரதி. அத்துவித ஞானி, ஈட்டு வியாக்கியானங் களிலே முழுதும் பயிற்சி பெற்ற பேரறி ஞன் அடி என்ற சொல்லுக்குரிய விழுமிய பொருள்களுள் ஐசுவரியம் (செல்வம்) என்பதும் ஒன்று. செல்வம் உடையவர்கள் உலகில் எல்லாவற்றையும் அடையமுடியும் என்ற பொருள்பட ஈட்டுவியாக்கியானம், அடியுடையார்க்கு எல்லாம் சாதித்துக்கொள்ளலாம் என்கிறது.

எனவே, பாரதியாரும் இந்தப் பொருள் படவே பெருவளங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டதும் (கடல்படு செல்வம்) தன்னை ஆள்பவர்க்குப் பெருவளத்தை அளிக்கத்தக்கதுமான மேற்குக் கடலை அடிமேலைக்கடல் என்று விளக்கியிருத்தலும் கூடுமன்றோ?

மேலை நாட்டார் அனைவ ரும் மேற்குக் கடற்கரை வழி யாகவே இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

இதை நன்கு அறிந்தவர் பாரதியார். பிறர் ஆதிக்கம் செலுத்தி இந்தியச் செல்வ த்தைக் கொள்ளையிட உதவிய மேலைக்கடல் ஆதிக்கம் இந்தியர்களுக்கு வாய்க்கும் வாய்ப்பு வேண்டும் என்று கருதியே ‘மேலைக்கடல் முழுதுங் கப்பல் விடுவோம்’ என்றார். இன்னொரு பேருண் மையும் உள்ளது. இப்பாடலில் அடுத்த பகுதியிலேயே அதைக் கூறியுள்ளார்.

‘முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே

மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே

நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே

நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே’

என்றார்.

தென்கரையும் மேற்கரையும் தாம் பெரிதும் மேலை நாட்டவர்களை இந்தி யாவுக்கு இழுத்தன என்பது பாரதி அறிந்த உண்மை. இதற்காக அவர் கீழ்க்கடலைப் புறக்கணித்த தாகக் கொள்ள முடியாது.

Download As PDF

No comments:

Popular Posts