Ads

exclusivemails.net

Sunday, February 21, 2010

ஈழத்துக் கலைஞர் பிச்சையப்பா காலமானார்




லங்கையில் அனைவராலும் பிச்சையப்பா என செல்லமாக அழைக்கப்படும் சிறந்ததொரு கலைஞரான ஸ்ரீதர் பிச்சையப்பா நேற்று (20.02.10) காலமானார். 48 வயதான இவர் கடந்த சில வருடங்களாக சுகவீனமுற்றிருந்தார்.

எனினும் தனது உடல் நலத்தினை பொருட்படுத்தாது கலைப்பணியை முன்னெடுத்து வந்தார். இலங்கையில் மட்டுமல்லாது நாடு கடந்தும் தனது கலைப்பணியை முன்னெடுத்தமை சிறப்பானதொன்றாகும்.

தனது சிறுவயது முதல், வானொலி முதலாக அனைத்து ஊடகத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தவராவார்சிறந்த நாடக நடிகராக, சிறந்த ஓவியனாக மட்டுமல்லாது சிறந்த பாடகனாக என பல்வேறு துறைகளிலும் பிரகாசித்திருந்தார். அத்துடன் நாடு போற்றும் கவிதை எழுதுவதிலும் சிறந்த கவிஞராகவும் அவர் அடையாளங் காணப்பட்டார்.

ஜனரஞ்சகமான பாடல்களை எழுதி பாடுவதிலும் வல்லவராக அவர் திகழ்ந்தார். சினிமாத்துறையிலும் சிறந்து விளங்கிய இவர் சிறந்த கட்டுரைகளை எழுவது மட்டுமல்லாது சிறந்த சினிமாக்கதைகளையும் எழுதிவந்தமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
இவரது இழப்பானது ஈழத்து கலைத்துறையில் பாரிய வெற்றிடத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.
Download As PDF

No comments:

Popular Posts