தமிழனுக்கென்று ஒரு தேசம் இல்லையாயினும் இன்று உலகெங்கும் அவனில்லாத நாடே இல்லை எனுமளவுக்கு பரந்து வாழ்வது நம்மெல்லோருக்கும் தெரியும். தமிழகம் உலகத் தமிழரனைவரதும் தாயகம். பக்கத்திலேயே ஈழத்தில் தமிழர் நிலை எல்லோரும் அறிந்தது. ஆங்கிலேய ஆட்சியில் கரையோரங்களை அண்டி அமைந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் கல்விக்கூடங்களை சரியாகப் பயன்படுத்தி கல்வியின் மூலம் உயர்நிலைக்கு வந்து இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உயர் நிலையில் இருந்தவர்கள் சுதந்திரத்தின் போது சரியாக தமக்குரியதைப் பெற்றுக் கொள்ளாமல் தவற விட்டு பின் பெரும்பான்மையினரின் சதி புரிந்து, விட்ட தவறை திருத்த முயன்றாலும் முடியாது, முதலில் அகிம்சை வழியிலும் பின் ஆயுதப் போராட்டம் மூலமாகவும் ஞாயமாய் தமக்குரிய அதிகாரத்தை பெற முயன்று, இயலாமல் இன்று நேர்ந்திருக்கும் அவலம் உங்களெல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அதிகாரத்திற்காய் போராடிய ஈழத் தமிழர் அல்லாது இதே இலங்கையில் வாழும் அதிகாரத்திற்காய் அல்லாது அன்றாடம் சோற்றுக்கே அல்லாடும் மலையகத் தமிழினம் பற்றி எந்தளவு அறிந்துள்ளீர்கள். 90 வீதத்திற்கும் மேல் எழுத்தறிவுள்ள தேசத்தில் தற்குறிகள் அதிகம் உள்ள பிரிவினர் என புள்ளி விபரங்கள் சொல்லும் பிரிவைச் சார்ந்த ஒருவன் என்ற முறையில் எங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம் என விழைகிறேன்.
ஈழத் தமிழர் போல் எமக்கு இலங்கையில் நூறாண்டுகளாய் நீடித்த நெடிய வரலாறு இல்லை. ஒரு இருநூறு வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயரால் இங்கு கோப்பி,தேயிலை என்பன பயிரிடப்பட்ட போது கூலியாட்களாய் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். இவர்களை இங்கு கொணர்ந்த விதம் பற்றி ஒரு கதை சொல்வர் தேயிலைத் தூரின் கீழே மாசியும் தேங்காயும் இருக்கின்றதெனக் கூறியே இவர்கள் இங்கே வரவழைக்கப் பட்டர்களாம். இதன் உண்மைத்தன்மை எப்படியானதாயிருந்தாலும் சற்று மிகைப்படுத்தியேனும் அவர்களது அப்பாவித் தனத்தையே இது சொல்கின்றது எனலாம்.
மலையகத்தவரின் வாழிடம் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். வெள்ளைக்கார துரைமார் குதிரைகளைக் கட்டப் பயன்படுத்திய குதிரை லாயத்தில் நம் மக்கள் ஒடுங்கிப் படுப்பதைக் கண்டு இதையே அவர்களின் குடியிருப்பாக்கி விட்டனர் என்றும் ஒரு கதையுண்டு. இந்த லயன் காம்பராக்கள் என்று அழைக்கப் படும் இக்குடியிருப்புகள் ஏதோ சில தசாப்தங்களுக்கு முந்தியதல்ல. பெரும்பான்மையானோரின் வாழ்க்கை இன்னும் இந்த லயன்களில்தான்.
இந்த ஹைக்கூவை வாசித்துப் பாருங்கள் மலையகத்தின் பிரபல கவிஞர்களில் ஒருவரான சு.முரளிதரன் எழுதியது நான் ஆசிரியப் பயிற்சி பெற்றக் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி. சுஜாதா கூட கற்றதும் பெற்றதுமில் இவரது கவிதையொன்றை குறிப்பிட்டிருப்பார்.
இதுதான் லயன்களில் நம்மக்களின் வாழ்க்கை
போதுமான ஆட்களேறியும்
புறப்படவில்லையே புகையிரதம்!
லயன்கள்.
நன்றி:
தர்ஷன்
மாத்தளை, மலையகம்
3 comments:
அன்றாடம் சோற்றுக்கே அல்லல் உறுகிறீர் என்றீரே.அது யார் செய்த தவறு? நான் இருக்கும் தமிழகம் செய்த தவறா இல்லை உம் இந்தியாவின் தன் தவறா இல்லை .ஈழத்தமிழர் செய்த தவறா ,இல்லை சோற்றுக்காக சிங்களை நக்கி பிழைக்கும் நீவிரும் உம் தொண்டைமான்களும் செய்த தவறா.சோற்றுக்கே வழியின்றி போன நிலையில் ஒருவன் போராடாவிட்டால் அவன் இருந்தால் என்ன செத்தால் என்ன.
ஈழத்தமிழர்கள் எல்லாம் ஈழத்தில் ஏதோ மாடமாளிகைகளில் வாழ்வது போல் அதிகாரத்திற்காக போராடினார்கள் என்றீரே. ஒரு வேலை உணவிற்கு சிங்களுடன் புணரும் அவல நிலையில் இருக்கும் ஈழத்தமிழச்சியர் உம் கண்களுக்கு தெரியவில்லையா.ஏன் ஈழத்தமிழர் மீது இத்தனை வன்மன் இந்த தொண்டைமான்களுக்கு?
-தமிழகத்தில் இருந்து கொற்றவன்
தமிழின பகைவர்களாம் ஆரிய பார்ப்பனருள் ஒருவனான சுசாதா பற்றி பேசுவதிலிருந்தே தாம் யார் என்ரு தெரிகிறது.பாரியின் மகள்களை எள்ளி நகையாடிய பாலியல் வெறிபிடித்த பேடி தானே அவன்
இப்படி அப்படி என்று தமிழினம் என்று இல்லை.எல்லாம் ஒரே தமிழினம் தான்.நீவீர் எல்லாம் வேறு இனம் என்றால் என்ன மயிருக்காக உமக்காக தமிழ் நாட்டிலிருப்பவர் பேசவேண்டும்.ஆம் ஈழம்பற்றி பேசிய உடனே இந்தியா நடத்திய போரை நிறுத்திவிட்டது.இதில்.........
Post a Comment