Ads

exclusivemails.net

Wednesday, April 7, 2010

நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் எதிர்விளைவிலிருந்து எம்மைப் பாதுகாப்பதே ஆரோக்கியம்



இன்று எங்குபார்த்தாலும் யாரைக் கேட்டாலும் “சுகமில்லை” என்றுதான் பதில் வருகிறது. கேட்டால் பல காரணங் கள் கூறுவார்கள். வைத்தியசாலைக்குச் சென்று மருந்தை ஒருதடவை எடுத் தால் சரியாகிவிடுமா என்ன? இரண்டு அல்லது மூன்று முறை சென்று அலைய வேண்டும்.
நாம் உண்ணும் உணவு, மற்றும் நீர், தூக்கம் போன்றனவும் நமது உடல் சுகாதாரத்திற்கு கேடாக அமைகின்றன என்பதை நாம் சிந்தித்தாலும் தற்கால உலகில் விரைவான விஞ்ஞானயுகத்தில் எந்தப் பொருளில்தான் தீமையில்லை? அப்படியானால் என்னதான் செய்வது என்று பலர் தலையை பிய்த்துக் கொள்வதை நாம் தினமும்தான் காண்கிறோம்.
உண்மையில் இன்று உலகளாவிய ரீதியில் சுகாதாரத்திற்கு கேடு ஏற்பட்டுள்ளது. உலகில் அதிகரித்த வெப்பம், கடல்நீர்மட்டம் உயர்வு, வறுமை, பொருளின் விலையேற்றம், அதிகரித்த சனத்தொகை, எதிலும் கலப்படம், நவீன விஞ்ஞானம் என்ற பெயரில் எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதில் இரசாயன தூவல்.... புதியரக கண்டுபிடிப்புக்கள், பல்வேறு உணவுப்பண்டங்கள் இவ்வாறு நாளுக்கு நாள் மனிதன் எதையாவது புதுமை என்ற பேரில் சுகாதாரத்திற்கு கேடான பல விடயங்களை பகட்டாக காட்டி பணம் சம்பாதிக்கத் தலைப்பட்டதன் விளைவு இன்று மனிதனையே வைத்தியசாலைக்குள் நிற்க வைத்துள்ளது.
அந்தக் காலத்தில் ஒரு கலவை மருந்து தருவார்கள். அத்தோடு எல்லாம் சரியாகி விடும். இப்போது அப்படி இல்லை. எல்லாமே மாத்திரை வடிவில் வந்தது மட்டுமல்ல, எங்கு பார்த்தாலும் நவீன மருத்துவமனைகள், வைத்திய நிபுணர்களின் சேவைகள் என்ற பதாகைகள்தான் வீதிகளை அலங்கரிக்கின்றன.
ஆயினும் நோயைக் கண்டுபிடிப்பதில் ஆறுமாதம், நோயை இலகுவாக்க ஆறுமாதம் செலவோ பல லட்சம். தீர்ந்ததா நோய். மனிதர் படுத்த படுக்கை. நிம்மதியாக சாப்பிட முடியாது, நினைத்த சாப்பாடு உண்ண முடியாது, எதிலும் கட்டுப்பாடு. இன்றைய யதார்த்த நிலை இதுதான்.

உலக சுகாதார அமைப்பானது “இயலுமானளவு உயர்ந்த சுகாதாரத்தை அடைவதற்கு எல்லா மக்களுக்கும் உதவுகின்ற அமைப்பாக இருக்கிறது” இதன் காரணமாக உலகின் நாலாபுறமும் காணப்படுகின்ற அனைத்துவிதமான சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு உடன் தீர்த்து வைப்பதில் குறியாய் இருந்து மக்களையும், உலகையும் பாதுகாத்து வருகின்றது.
மக்களின் மகோன்னத நிலை காரணமாக உலகத்தின் சுகாதார நிலையில் பாரிய மாற்றங்களும் நிகழாமலில்லை. ஆதலால்தான் மக்களின் சுகாதார மேம்பாட்டை ஒவ்வொரு மகனும் அனுசரித்து ஒழுகுவதன் மூலமாக சுகாதார நலன் மேம்பட ஏதுவாகிறது.
மனிதனது வாழ்க்கைத் தரமானது சூழலுடன் நெருங்கியதாகவே காணப்படு கிறது. நோயும், இறப்பும் மனிதவாழ்வின் முக்கிய அம்சங்களாக இருப்பினும் மனிதனது ஆயுட்காலம் இன்று வைத் தியத்துறை மேலோங்கிக் காணப்பட்ட மையால் குறிப்பாக இலங்கையில் 70 வயதிற்கும் மேலாக காணப்படுகிறது.
அந்தளவிற்கு மக்களின் சுகாதார நலனில் அதிக அக்கறையுடன் சுகாதாரத்துறை இரண்டறக்கலந்து காணப்படுவதையே இவை காட்டினாலும் அவ்வப்போது புதிய புதிய நோய்களும் எம்மை வந்து தாக்கியபடியேதான் உள்ளன.
காரணங்கள் பல கூறப்பட்டாலும் உலகின் அனைத்து நாடுகளும் சம அளவான போக்குடன் திகழாதது முக்கியமானது எனலாம். மேற்குலக நாடுகளில் வசதியான வீடு, சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், சிறந்த கழிப்பிட வசதிகள், திறமையான வைத் திய வசதிகள் உள்ள மையினால் தொற்று நோய்களும், இலகுவில் பீடிப்பது குறை வாக இருக் கிறது. ஆனால் உலகின் வறுமை யான நாடுகளில் இவை கிடைக்காது விடுவதால்தான் பலவிதமான நோய்களும் ஏற்பட்டு அவை உலகம் பூராகவும் பரவுவதற்கு காரணமாகவும் அமைகின்றன.
“எய்ட்ஸ் நோய்” ஆரம்பத்தில் ஆபிரிக்காவிலிருந்து வந்தது என்பது ஒருபுறம் பேசப்பட்டாலும், இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டு காணப் படுகின்ற பன்றி, பறவை, எலி போன்ற பிராணிகளின் பெயர்களில் உலாவரும் நோய்களும் உலகை முழு வதையுமல்லவா அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றன.
மனிதனின் உடற்சுகாதாரம், இருப்பிடம், அவனது செயற்பாடுகள் எல்லாமே இன்று மாறுபட்டுள்ள நிலையில் அவசரமான ஒரு யுகத்தில் ஏதோ சிந்தனையில் மாற்றம், வீதியில் விபத்து, எனக்கு தலைகுழம்பிவிட்டது என்ற பேச்சுக்களின் மத்தியில் அசுரவேகத்தில் இன்றைய மனிதத்துவம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. எது எப்படி இருப்பினும் எமது நாட்டை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றுக்கும் மேலாக சுகாதார மேம்பாட்டுத் திட்ட ங்கள் நல்ல பல னைத் தந்துள்ளன என்றே கூறலாம்.
இன்று அதிகமா னவர்களின் பிரச்சி னை இதுதான். சிறு நீரகக் கல், நீரிழிவு நோய், கண் நோய், டெங்கு என்று எத் தனையோ வகை யான நோய்க ளுக்கும் மத்தியில் இலங்கையில் சுகா தார அமைச்சு ஒவ் வொரு கால கட்ட ங்களிலும் அதற்கான தடுப்புக்களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டு வந்தாலும் மக்களின் மனங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதாக இல்லை. அதிகளவான நிதி சுகாதாரத்துறைக்கு வருடாந்தம் செலவு செய்யப்பட்டு வருகிறது.
பிரதேசத்திற்குப் பிரதேசம் நவீன வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டு ள்ளன. மக்களின் சுகாதாரத் துறையில் நல்லதொரு நிலையை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இவை அனைத்தும் எடுக்கப்படுகின்றன.
சுகாதாரத்திட்டத்தை கல்வியில் இணைந் துள்ள அரசு, பாடசாலையில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் அன்றிலிருந்து இன்றுவரையும் பல்வேறு வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியே வருவதை நாம் காணலாம். காலையில் உடற்பயிற்சி, உள்ளத்திற்கு உளப்பயிற்சி, உடல் நல வேலைத்திட்டம் போன்ற சுகாதார கற்றல் கற்பித்தல் முறைகள், இணைப் பாடவிதான செயற்பாடுகள் என்ற பெயரில் விளையாட்டு நிகழ்வுகள், சாரணியம் என பல வடிவங்களில் மாணவர் செயற்பாடுகள் நடைபெற்று வந்தாலும் ஒரு வயதுடன் இவையனைத் துமே நின்று விடுவதையும் நாம் காண் கிறோம்.
நல்ல திறமையான வீரர்கள் என்ற பட்டம் பெற்றவர்கள் பதவி ஒன்றை பெற்றவுடன் அத்தோடு முடிந்தது கதை. ‘என்னால் ஓட முடியாது, எனக்கு நடக்க வராது, எதனையும் தூக்க முடியாது’ என்று கூறுவோர் பலர் உள்ளனர். உண்மையில் இவ்வாறான நிலைமைக்கு நம்மை நாம் மாற்றுகின்றபோதுதான் உடலுக்கும் உள்ளத்திற்கும் சுகாதார நலனில் ஓட்டை விழுகிறது.
அதிலிருந்து நாம் ஒவ்வொரு வரும் எம்மைக் காப்பாற்றக்கூடிய நிலையில் மாத்திரமின்றி தன்னுடைய பிள்ளைகளையும் காப்பாற்றுவதில் குறியாக இருத்தல் வேண்டும்.
அண்மையில் வெளிப்படுத்த முடியாத நோய்களுக்கான பிரிவின் பணிப்பாளரான டாக்டர் எஸ். பன்னப்பட்டிய தெரிவித்த விடயம் ஆச்சரியமாகவே உள்ளது. அதாவது ‘வெளிப்படுத்த முடியாத நோய்கள் அதிகரித்து வருகின்ற ஒரு நிலைமை இன்று நமது நாட்டில் காணப்படுகின்றது.
மேலும், நாட்டின் சனத்தொகையில் சுமார் 20 வீதமானோர் அதிக இரத்த அழுத்த நோயினாலும், 15 வீதமானோர் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களில் 10 வீதமானோர் நீரிழிவு நோய்க்குள்ளாகியுள்ளமையும் தெரிய வந்துள்ளது என்று கூறுகிறார்.
எனவேதான் பாடசாலை வாழ்க்கையில் மாணவர்களின் உளசேம நலனில் அக்கறை செலுத்தி மந்தபுத்தியற்றதும், சுகாதார நற்பழக்க வழக்கமுள்ள, ஒழுக்கமுறையில் உணவுண்ணும் பழக்கத்தை கைக்கொள்ளவே இன்று பாடசாலைகளில் போஷாக்கு நிறைந்த உணவு வழங்கப்பட வேண்டுமென அரசு பல கோடி ரூபாவை செலவிடுகிறது.
போஷாக்கு உணவுக்குப் பதிலாக மாணவர்களின் சுகாதாரத்திற்கே இழுக்கு ஏற்படுமளவிற்கு இன்று உணவுகள் நஞ்சாவதும் இடையிடையே நடைபெறுகின் றது. இச்சுகாதார நலனில் அக்கறையற்றவர்கள் இருக்கும்வரை மக்களின் சுகாதார நல்வாழ்வு எவ்வாறு அமையப்போகி றது?
திட்டமிட்டு நமது உடல் சுகாதாரத்தின் மேம்பாட்டுக்கு நாமே பொறுப்பாளராக இருந்து நம்மை நாம் காப்பாற்றி, சுகாதார ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வழிசமைப்பதுடன், நவீன விஞ்ஞான யுகத்திற்கேற்றவாறான பாதிப்புக்களிலிருந்தும் எம்மை காப்பாற்றிக் கொள்ளத் தயாராவோம்.
Download As PDF

No comments:

Popular Posts