தூங்கும்போது கூட காலாட்டிக்கிட்டே தூங்கணும். இல்லேன்னா என்னாகும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் நம்ம பூஜா. நான் கடவுள் படத்துக்கு பிறகு ஒரு படத்துக்கும் கை நீட்டி அட்வான்ஸ் வாங்கவில்லை. கால்ஷீட் கேட்பவர்களுக்கும் சரியான பதில் சொல்வதில்லை. ஒருவேளை காதலாக இருக்குமோ என்று குழம்பிப் போன கோடம்பாக்கம், அவருக்கு கல்யாணம்ப்பா என்று கதை பரப்ப ஆரம்பித்தது. சினிமாவுக்கே முழுக்கு என்று மேலும் கொஞ்சம் அதிர்ச்சியை தடவி, அச்சிலும் ஏற்றினார்கள். அச்சச்சோ... என்று அதன்பின்தான் விழித்துக் கொண்டார் பூஜா.
அவசரம் அவசரமாக ஒரு விளக்கம் வந்திருக்கிறது அவரிடமிருந்து. என்னை வளர்த்த பாட்டிக்கு 90 வயசு. அவங்களை பக்கத்தில இருந்து பார்த்துக்கணும் இல்லையா? வயதான காலத்தில் நாமதானே அவங்களுக்கு எல்லாம் செய்யணும். அப்பாவும் கல்யாணத்துக்கு அவசரப்படுத்தினார். அவரு விருப்பத்துக்கு சரி சொன்னதும் நிஜம்தான். ஆனால் நான் போட்ட கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டு தாலிகட்ட யாராவது வருவது சந்தேகம்தான். அந்தளவுக்கு நிபந்தனைகள் போட்டிருக்கேன். (கண்டிஷனை அப்படியே டென்டர் மாதிரி அறிவிச்சிருந்தா ரொம்ப பேரு அப்ளிகேஷன் போட்டோம்ங்கிற ஆறுதலிலேயே வாழ்ந்திருப்பாங்களே பூஜா) இந்த கடமைகள் ஒருபக்கம் இருந்தாலும் நல்ல கதைகளுக்காக காத்திருக்கேன் என்பதுதான் உண்மை. அதுக்காக நான் சினிமாவுக்கு முழுக்கு என்று செய்தி போடுறதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிறார் பூஜா.
யாருப்பா அப்படி ஒரு செய்தியை போட்டு பூஜா மனசுல பூகம்பத்தை கிளப்புனது?
பெங்களுருவில் இருக்கும் பூஜா, தனது வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட கூட தானே போகிறார். அதுவும் ஆட்டோவில். ரிட்டையர் ஆன நடிகைகளே பல்லு செட்டை கழற்றி வைக்க அஞ்சுற காலத்திலே அபபடியெல்லாம் இமேஜ் பார்க்காத பூஜாவுக்கு இம்சையை கொடுக்காதீங்கப்பு...
Download As PDF
No comments:
Post a Comment