Ads

exclusivemails.net

Wednesday, April 28, 2010

முரண்பாடான நோக்கங்களுடன் ஆப்கான் அமைதி முயற்சி.....



ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஜனாதிபதி ஹமிட் கர்ஸாய் ‘ஜிர்கா’வுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார். ‘ஜிர்கா’ என்பதை இனக் குழுக்கள் சபை எனக் கூறலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள இனக் குழுக்களில் முதியவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக 1200 முதல் 1400 பேர் வரை அழைப்பதற்கான ஏற்பாடுகளை கர்ஸாய் செய்கின்றார். ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆற்றிய உரையில் இப்படியான ஒரு சபையைக் கூட்டும் ஆலோசனையை கர்ஸாய் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மே மாதம் 2ந் திகதி முதல் 4ந் திகதி வரை நடைபெறவுள்ள ‘ஜிர்கா’ கர்ஸாய் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றியளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தலிபான்களின் பங்களிப்பு இல்லாமல் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. தலிபான்களையும் அழைப்பதற்கு கர்ஸாய் திட்டமிட்டுள்ளார். தலிபான்கள் பங்குபற்றுவார்களா என்பதே பிரதான கேள்வியாக உள்ளது.
வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் குறைந்த பட்சம் இன்னும் பதினைந்து வருடங்கள் இருக்கவேண்டும் என்று சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் கூறிய கர்ஸாய் இப்போது அவசரமாக ‘ஜிர்கா’வைக் கூட்டுகின்றார். முழு நாடும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதான நடைமுறை பற்றிய இணக்கத்தை ஏற்படுத்துவதே ‘ஜிர்கா’வைக் கூட்டுவதன் நோக்கம்.
சுருக்கமாகக் கூறுவதானால் வெளிநாட்டுப் படைகள் இயலுமான அளவு விரைவில் வெளியேறும் சூழ்நிலையைத் தோற்றுவிப்பது நோக்கம். கர்ஸாயின் மனமாற்றத்துக்குக் காரணம் இல்லாமலில்லை. அது பற்றி பின்னர் பார்ப்போம்.
இவ்வருடம் ஜனவரி 28ந் திகதி லண்டனில் ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடர்பாக உயர்மட்ட மகாநாடொன்று நடைபெற்றது. ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட எழுபதுக்கு மேற்பட்ட வர்கள் பங்குபற்றிய இம் மகா நாட்டில் அமெரிக் காவும் பிரித் தானியாவும் முக்கிய பாத்திரம் வகித்தன.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவதற்கான மூலோபாயத்தைத் தீர்மானிப்பது மகாநாட்டின் பிரதான நோக்கம். ஆப்கானிஸ்தானில் ஆயுதக் குழுக்களுக்குத் தலைமை தாங்கும் யுத்தப் பிரபுக்களுக்கும் தலிபான்களில் ஒரு பகுதியினருக்கும் பணம் கொடுத்து அமைதி வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதன் மூலம் வெளிநாட்டுப் படைகளின் வெளியேற்றத்துக்கு வழிவகுக்கலாம் என அங்கு உடன்பாடு காணப்பட்டது.
இதற்காக மேற்கத்திய நாடுகள் 650 மில்லியன் டொலர் நிதியமொன்றை ஆரம்பித்திருக்கின்றன. இதே நோக்கத்துக்காக அமெரிக்கா அதன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் 1.3 பில்லியன் டொலரை ஏற்கனவே ஒதுக்கியிருந்தது.
லண்டன் மகாநாடும் கர்ஸாய் திட்டமிட்டுள்ள ‘ஜிர்கா’வும் ஒரே நோக்கத்தைக் கொண்டவை. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் இயன்றளவு விரைவில் வெளியேறுவதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அந்த நோக்கம். லண்டன் மகாநாட்டில் பங்குபற்றிய கர்ஸாய், அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு உடன்பாடு தெரிவித்தார்.
எனினும் இப்போது ‘ஜிர்கா’ வைக் கூட்டுவதில் கூடுதலான கவனம் செலுத்துகின்றார். அமெரிக்காவும் பிரித்தானியாவும் கர்ஸாயின் ‘ஜிர்கா’ திட்டத்துக்குப் பெயரளவில் ஆதரவு தெரிவிக் கின்ற போதிலும் மறைமுகமாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. பாகிஸ்தானின் உளவு சேவையான ஐ. எஸ். ஐயை ஊக்குவித்து கர்ஸாயின் திட்டத்தைக் குழப்ப முயற்சிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதித் தேர்தல் காலத்திலேயே கர்ஸாய் தொடர்பாக அமெரிக்காவுக்குக் கசப்புணர்வு வளரத் தொட ங்கியது. எந்தக் காலத்திலும் தனது கைப் பொம்மையாக இருக்க வேண்டும் என்பதற் காகவே அமெ ரிக்கா கர்ஸா யைப் பதவி யில் அமர்த் தியது. ஆனால் கர்ஸாய் படிப் படியாகத் தனித்து வத்தை நிலைநாட்டுவதில் அக்கறை கொண்டவராக இருந்தார். இதனால் கர்ஸாய் மீது அமெரிக்காவுக்குக் கசப்புணர்வு ஏற்பட்டது. இது தேர்தல் காலத்தில் அதிகரித்தது.
யுத்தக் குற்றச் செயல்களுக்காக அமெரிக்காவினால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதைத் தொடர் ந்து ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறித் துருக்கியில் வாழ்ந் தவர் அஹமட் ரiட் டொஸ்ரம். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கர்ஸாய் டொஸ்ரத்தைத் துருக்கியிலிருந்து அழைத்து வந்து தனது பிரதான தேர்தல் பரப்பு ரையாளர்களில் ஒருவராக நியமித்தார்.
போதை வஸ்து கடத் தல் தொடர்பாக முன் னாள் பாதுகாப்பு அமைச்சர் மொஹ மட் குவாஸிம் பாஹிம்முக்கு எதிராக அமரிக்கா விசாரணை ஆரம்பித்திருந்தது. கர்ஸாய் அவரைத் தனது உப ஜனாதிபதி வேட்பாளராக (running mate)  அறிவித்தார்.
தாங்கள் கீறிய கோட்டைக் கர்ஸாய் தான்டு கின்றார் என்ற எண் ணத்தை இவை அமெரிக்க ஆட்சியாளர்களிடம் தோற்றுவித் தன. இதனால் கர்ஸாய்க்கு எதிரான உணர்வலைகளை ஆப்கான் மக்கள் மத்தியில் வளர்க்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது.
எத்தனையோ ஊழல் தேர்தல் முடிவுகளை எவ்விதத் தயக்கமுமின்றி அங்கீகரித்த அமெரிக்கா, கர்ஸாய் தேர்தலில் ஊழல் புரிந்திருக்கின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. பின்னர், கர்ஸாயின் நிர்வாகத்தில் ஊழல் என்று சாடைமாடையாகக் கூறத் தொடங்கியது. கர்ஸாயின் சகோதரர் அஹமட் கர்ஸாயின் பெயர் சீ. ஐ. ஏயின் கொடுப்பனவுப் பட்டியலில் (PAYROLL)  இருக்கின்றது என்ற தகவலையும் அவர் போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபடுபவர் என்ற தகவலையும் அமெரிக்க அதிகாரிகள் ஊடகங்களுக்குக் கசியவிட்டனர்.
தனக்கு எதிராக அமெரிக்கா காய்நகர்த்துகின்றது என்பதைப் புரிந்துகொண்ட நிலையிலேயே கர்ஸாய் ‘ஜிர்கா’ வைக்கூட்டும் முயற்சியில் இறங்கினார். ஜனாதிபதிப் பதவியேற்பு நிகழ்வில் கர்ஸாய் ‘ஜிர்கா’ பற்றிக் குறிப்பிட்ட போதிலும் இவ்வளவு விரைவில் அதைக் கூட்டும் எண்ணம் அப்போது அவருக்கு இருக்கவில்லை.
கர்ஸாய் எதிர்பார்த்தபடி ‘ஜிர்கா’ வெற்றிகரமாக அமையுமேயானால் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவது உறுதியாகிவிடும். அமைதி திரும்பிய ஆப்கானிஸ்தானில் கர்ஸாயின் செல்வாக்கு மேலோங்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த நிலை அமெரிக்காவுக்கு உடன்பாடானதல்ல.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2012ம் ஆண்டு நடைபெறவிருக்கின்றது. பராக் ஒபாமா அதற்குத் தயாராகின்றார். அமெரிக்காவின் பிடி எதுவும் இல்லாமல் கர்ஸாயிடம் ஆப்கானிஸ்தானைக் கையளித்துவிட்டுச் செல்வதைப் பெரும் பாலான அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்கள்.
அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட அரசாங்கம் அமையும் நிலையில் வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவது தான் தேர்தலில் ஒபாமாவுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும். அமெரிக்கா அதன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத் தில் 1.3 பில்லி யன் டொலர் ஒதுக்கி யிருப் பதும் லண்டன் உயர்மட்ட மகாநாட்டில் 650 மில்லியன் டொலர் ஒதுக்கியிரு ப்பதும் இதற்காகவே.
‘ஜிர்கா’ இடம் பெறுவதைத் தவிர்ப் பதில் அமெரிக்கா உள்ளி ட்ட மேற்கத்திய நாடுகள் மாத்திரமல்லாது பாகிஸ்தானும் அக்கறை கொண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்தானின் இன்றைய அரசாங்கத்துக்கும் இந்தியா வுக்கும் இடையிலான உறவு பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
தனது அதிகாரத்துக்குக் கட்டுப்படும் ஆட்சியொன்றையே ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எதிர்பார்க்கின்றது. இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே ஐ. எஸ். ஐக்கும் தலிபான்களுக்கும் இடையிலாக உறவு தொடர்கின்றது. ஐ. எஸ். ஐயின் உதவியுடன் படிப்படியாக தலிபானை அதிகாரத்துக்குக் கொண்டு வருவது பாகிஸ்தானின் திட்டம்.
கர்ஸாய் நேரடியாகத் தலிபான்களுடன் தொடர்புகொள்வதைப் பாகிஸ்தான் விரும்பவில்லை. தலிபான்களின் இரண்டாது தலைவர் எனக் கருதப்பட்ட முல்லா அப்துல் கானி பரதார் கைது செய்யப்பட்டதற்கும் பாகிஸ்தானின் இந்த நிலைப்பாட்டுக்கும் தொடர்பு உண்டு. ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பரதாருடன் தொடர்புகொண்டிருந்தது என்றும் தனது ஆதரவாளர்களுடன் ‘ஜிர்கா’வில் பங்கு பற்றுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார் என்றும் ‘வாஷிங்டன் போஸ்ற்’ செய்தி வெளியிட்டிருந்ததை இங்கு குறிப்பிடலாம். ஐ. எஸ். ஐயின் உதவி இல்லாமல் இக் கைது சாத்தியமாகியிருக்காது.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும் என்பதில் உடன்பாடு காணப்படுகின்றபோதிலும், எவ்வாறான அரசாங்கம் அமைய வேண்டும் என்பதில் தோன்றியுள்ள முரண்பாடு அந்த நாட்டை நிரந்தரமான யுத்தபூமி ஆக்கிவிடும் போல் தெரிகின்றது.
 
Download As PDF

No comments:

Popular Posts