Ads

exclusivemails.net

Tuesday, April 27, 2010

சிவப்பு மழை படத்திற்கு இலங்கையில் தடை!


சுரேஷ் ஜோகிம்-மீராஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த கின்னஸ் படம் சிவப்பு மழை. 12 நாட்களில் உருவாக்கப்பட்ட படம் இது. ஒருபுறம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்டாலும், மறுபுறம் ஈழ விடுதலை போராட்டத்தின் வலி¬யையும் சொல்லிய படம் அது. (அதை முழுமையாக சொல்லியிருக்கிறார்களா என்பது வேறு விஷயம்) படத்தின் நாயகன் சுரேஷ் ஜோகிம் ஒரு ஈழத்தமிழர் என்பதும் இப்படி ஒரு படம் அமைய காரணமாக இருந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை இலங்கையில் வெளியிட தடை விதித்துள்ளது ராஜபக்சேவின் அரசு.
தமிழகத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆகிற அதே நேரத்தில் கொழும்பு போன்ற நகரங்களிலும் அப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள் விநியோகஸ்தர்கள். தமிழகத்தில் எடுக்கப்படுகிற படங்களுக்கே இந்த வரவேற்பு என்றால் இலங்கையில் நடந்த ஒரு முக்கிய பிரச்சனையை காட்டுகிற படத்துக்கு எப்படி ஒரு வரவேற்பு இருக்க வேண்டும்? ஆனால் அதற்கு வழி கொடுக்காமல் முதலிலேயே இந்த படத்தை வெளியிட முட்டுக்கட்டை போட்டிருக்கிறது அந்த அரசு.
இதை எதிர்த்து போராடுகிற நிலையில் எவரும் இல்லை என்பதால், இலங்கை தவிர பிற இடங்களில் தொடர்ந்து திரையிடும் முயற்சியில் வெற்றி கண்டு வருகிறார் சுரேஷ் ஜோகிம்.
Download As PDF

1 comment:

kippoo said...

இதை எதிர்த்து போராடுகிற நிலையில் எவரும் இல்லை

\\\\\இருந்ததையும் அளித்து விட்டார்களே\\\\\\\

Popular Posts