பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரிதான் பாடா படுத்துது ஆக்ஷன் படங்களோட நிலைமை! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளேதான்கிற மாதிரி வர்ற ஆக்ஷன் படங்களோட அந்தஸ்தை, கிரேன் வச்சு து£க்கும் போலிருக்கு கரண் நடிச்ச 'கனகவேல் காக்க' படம்!.
கதையின் தேவை கருதி கரண், தன்னையும் தன் இமேஜையும் அழித்துவிட்டு கதாபாத்திரத்தின் பலத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவர் ஹீரோவாகவோ, சாதாரண மனிதனாகவோ இல்லை. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியாக இருக்கிறார். இந்த துணிச்சல் அபூர்வமானது என்று பூடகமாக போட்டு தாக்கும் இயக்குனர் கவின் பாலா, படத்தில் துப்பாக்கி ஒன்றையும், பேனா ஒன்றையும் பாத்திரங்களாகவே உலவ விட்டிருக்கிறாராம். பொதுவாகவே தங்கள் பட ஹீரோவை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் எந்த டைரக்டரும். ஆனால் கவின் பாலா கண்களில் தெரிகிற நம்பிக்கை, "இது நெசந்தான்யா" என்கிறது ஒவ்வொரு முறையும்! இந்திய சினிமாவில் எந்த ஹீரோவும் மேற்கொள்ளாத ஒரு புதிய முயற்சியை இந்த படத்தில் கரண் செய்திருக்கிறார் என்கிறார் இந்த அறிமுக இயக்குனர்.
சுஜாதா, பாலகுமாரன் வரிசையில் பத்திரிகையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார் பா.ராகவன். "நான் இந்த படத்தின் வசனங்களில் வாழ தொடங்கி விட்டேன்" என்றாராம் படத்தின் எடிட்டர் சுரேஷ் அர்ஸ். அப்படியரு விறுவிறுப்பான வசனங்களை எழுதியிருக்கிறாராம் பா.ராகவன்.
கவின்பாலா சொல்கிற விஷயங்களில் ஒரு அரிதாரமில்லாத உண்மை இருக்கிறது. எப்படி? இந்த படத்தின் ஒரு ஏரியாவை விலை பேசுவதற்காக ப்ரிவியூ பார்த்தாராம் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷனின் சதீஷ்குமார். அப்புறம்? நானே எல்லா ஏரியா ரிலீசையும் பார்த்துக்கறேன் என்று மொத்தமாக அள்ளிக் கொண்டாராம்.
கவின்பாலாவின் வரவு, கலையுலகின் 'கும்ப மேளா'வாக இருக்கட்டும்..
Download As PDF
No comments:
Post a Comment