Ads

exclusivemails.net

Saturday, May 15, 2010

முல்லைப்பாட்டென்னும் நெஞ்சாற்றுப்ப....



சங்கத் தமிழ் ஓர் இலக்கியப் பேழையாகும். இஃது மக்கள் படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வமாகவும் விளங்குகிறது. ‘இலக்கணச் செறிவும் இலக்கியத் தகுதியும் உடையவர்களாக விளங்கிய சங்க காலப் புலவர் பெருமக்களால் பாடப்பெற்றவையாக இன்று நமக்குக் கிடைக்கும் பாடல்கள் மொத்தம் 2381’ ஆகும்.
ஒரு காலகட்டத்தில் எஞ்சிய பாடல்களை எல்லாம் தொகுத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு தோன்றியிருக்கிறது. அதன் காரணமாகச் சங்க காலத்தைச் சார்ந்த அரசர் பெருமக்களும் ஆர்வலர்களும் சங்கப் பாடல்களைத் தேடித் தொகுத்து முறைப்படுத்தும் பணியைத் தொடங்கினர். இந்த தேடுதல் பணியின் விளைவாகக் கிடைத்த பாடல்கள் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என்ற இரு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன.
சங்க இலக்கிய நூல்களைப் பதினெண்மேல்க் கணக்கு என்றும், சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் பாகுபாடு செய்துள்ளனர். பிற்காலத்தில் தோன்றிய பன்னி ருபாட்டியல் என்ற இலக்கண நூல் மேல்க்கணக்கு என்பதற்கு
‘ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா ஐவகைப் பாவும்; பொருள் நெறிமரபில் தொகுக்கப்படுவது மேல்க்கணக்காகும்’
என்று விளக்கமளிக்கின்றது-
சங்க இலக்கியத்தில் கலித்தொகை, பரிபாடல் தவிர பெரும்பான்மையான பாடல்கள் ஆசிரியப்பாவால் அமைந்துள்ளன. இத்தகைய பாடல்களை மூன்றடி முதல் முப்பத்தொரு அடி வரையுள்ள பாடல்களைத் தொகையாகத் தொகுத்தனர்.
103 அடிகளுக்கு மேலுள்ளள ஆசிரியப்பாவால் அமைந்த பாடல்கள் பத்தினைப் பத்துப்பாட்டு எனத் தொகுத்தனர், பாட்டும் தொகையும் என்பது பழங்கால உரையாசிரியர் வழக்கு. நச்சினாக்கினியர் உரைச் சிறப்புப் பாயிரத்தில்,
“ஆன்றோர் புகழ்ந்த அறிவினில் தெரிந்து சான்றோர் உரைத்த தன்தமிழ் தெரியல் ஒருபது பாட்டும்”
எனக் கூறப்பெறுவதும், பத்துப்பாட்டுக் கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று. கண்ணாற் கண்ட காட்சிகளை அப்படியே எழுதியிருக்கும் சொல் ஓவியமாகும். ஆசிரியர் சுந்தரம் பிள்ளை பத்துப் பாட்டின் பெருமையை,
“பத்துப் பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்டு இசையும் இலக்கணமில் கற்பனையே”
என்று மனோன்மணியத்தில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
திருமுருகாற்றுப்படை, பொருநராற் றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும். இதனை
“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக்காஞ்சி - மருவினிய கோலநெடுதல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”
என்ற பழஞ்செய்யுள் தெளிவுறுத் துகிறது. இவற்றுள் திருமுருகாற்றுப்படை QuickBooks Pro 2010பொருநராற்றுப்படை, சிறுபாணாற் றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்ற ஐந்தும் ஆற்றுப் படை என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தன. இவ்வைந்தும், மதுரைக் காஞ்சியும் புறப்பொருள் பற்றிக் கூறுவன. முல்லைப்பாட்டு, குறிஞ் சிப்பாட்டு, பட்டினப்பாலை என்ற மூன்றும் அகப்பொருள் பற்றியன. நெடுதல்வாடை அகமும், புறமும் பற்றியது ஆகும். பத்துப்பாட்டு முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
முல்லைப்பாட்டு ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்ததுப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார். இவருடய இயற்பெயர் பூதனார் என்பதும் ஆகும்.
கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கிய சான்றோர்களின் இயற் பெயருக்கு முன்னர் ‘ந’ என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச் சொல்லைத் சேர்த்து வழங்குதல் மரபு. இவர் வணிகர் குடித் தோன் றலாயினும் மன்னருடன் மற்றும் அவர்நம் படைகளுடன் பெரிதும் பழகியவர் எனலாம்.
இவர் தந்தையார் பொன்வாணிகர் என்பதும் இவர் சோழ நாட்டுத் தலைநகரில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் இவரின் பெயரிலிருந்து அறிந்துகொள்ளலாம். இவரைப்பற்றி நச்சினார்க்கினியர் கூறியதாவது : ‘எட்டுத்தொகை முதலியவற்றில் இவரியற்றியதாக ஒன்றும் காணப்படவில்லை.
காவிரிப்பூம் பட்டினத்திற் சதுக்கத்துப் பூதம் முதலிய பலரால் வழிபடத் தக்கனவாகவும் இருந்து வந்தமையின் அவற்றுள் ஒன்றை நினைந்து பூதனென்னும் பெயர் இடப்பட்டது போலும், கூறியிருத்தலால் இவர் நல்ல வீரம் பொருந்திய அரசர்களோடு பழகிய வரென்று தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.
முல்லைப்பாட்டு ஆசிரியரின் காலத்தை அறிய உறுதியான சான்றுகள் இல்லை. முல்லைப்பாட்டில் யவனரைப் பற்றியும், மிலேச்சரைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. நெடுநல் வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் வருகின்றன. நெடுநல்வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் காணப்படு வதால் நெடுதல் வாடை தோன்றிய காலத்தை அடுத்து முல்லைப்பாட்டு தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர் இராஜமாணிக்கனார் முல்லைப்பாட்டின் காலத்தைக் கணித்திருக்கிறார். நற்றிணையில் உள்ள 26ஆம் பாடலை இயற்றிய நப்பூதனாரும், முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனாரும் ஒருவரே என்ற ஒரு கருத்தும் உள்ளது.
பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தன்னைப் பகைத்து எதிர்த்த சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருகன் என்னும் அரசர் எழுவரோடும் போர்புரிதற் பொருட்டுச் சென்ற போது அவன்றன் மனைவி கொழுதன் பிரிந்த துயரத்தை ஆற்றிக் கொண்டிருந்த அருமையும் அவன் +yரிவி:(வி எல்லாம் வென்று தான் சொன்ன வண்ணம் கார்காலத் துவக்கத்திலே மீண்டு வந்ததையும் கண்டு நம்பூதனார் முல்லைப்பாட்டைப் பாடினார்.

முல்லைப்பாட்டின் அமைப்பு
முல்லைப்பாட்டு பத்துப்பாட்டுள் ஐந்தாம் பாட்டாக விளங்குகிறது. இது நூற்று மூன்று அடிகளைக் கொண்டு விளங்கும் சிறு நூல். முல்லைத்திணையின் ஒழுக்கத்தைச் சிறப்பித்துப் பாடுவது முல்லைப் பாட்டாகும். முல்லைக்குரிய உரிப் பொருள் இருத்தல், இருத்தல் நிமித்தமும் பாட்டில் கூறப்பட்டுள்ளது.
இருத்தல் என்றால் ஆற்றிக் கொண் டிருத்தல் என்பது பொருளாகும். தலைவன் பிரிந்து சென்றால் ஏற்படும் வருத்தத்தைத் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல் என்பதாகும். கற்பின் விளக்கம் கூறுவோர் எத்தகைய துன் பம் வரினும் தன்னிலையில் தளராது விளங்கும் ஒருத்தியை முல்லை சான்ற கற்பினள் என்பர். அத்தகைய முல்லை சான்ற கற்பினள் ஒருத்தியின் கற்புத் திறத்தை விளக்குவதாக முல்லைப்பாட்டு அமைந்துள்ளது.
மாற்றானை வென்று தன்னடிக்கீழ் வாழும் மன்னுயிர்க்கு நல்வாழ்க்கை தரும் பொருட்டு போர் மேற்சென்ற தலைவன் தான் வரும் வரையில் ஆற்றியிருக்க வேண்டும் என்று அன்பு டன் தன் தலைவியிடம் வேண்ட அவளும் அவ்வாறே ஆற்றியிருந்தாள். தலைவனும் தான் குறித்த காலத்தில் திரும்பி வந்து அவளைக் கூடி இன்புற்றான். இவ்விருவரின் கடமைகளையும் திறத்தையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.
தலைமகன் ஒருவன் தன் மணக் கிழத்தியைப் பிரிந்து பகை மன்னரோடு போர் செய்யப் போகிறான். அவ்வாறு சேர்பவன் போர் வினை முடித்துக் கார் காலத் தொடக்கத்தே வந்து விடுவேன். நீ ஆற்றியிருப்பாய் எனக் கூறிச்செல்கிறான்.
தன் தலைவன் கூறியது போல் மிக அருமையாக ஆற்றி யிருந்த தலைவி கார் காலம் தொடங் கிவிட்டதை அறிந்ததோடு வரவேண்டிய தலைவன் வராமையறிந்து தலைவி வருந்துகின்றாள். அவ்வாறு வருந்தும் அவளுக்காகச் செவிலித்தாயா நற்சொல் கேட்கின்றனர். அவ்வாறு கேட்டடவர் நின் தலைவர் இப்போதே வருவார் நீ இன்னும் சற்று ஆற்றியிருத்தல் வேண்டும் எனத் தேற்றுகின்றனர். தலைவி பெருமூச்சு விட்டாள்.
இந் நிலையில் அவள் மகிழுமாறு தலைவன் வரும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளின் ஆரவாரம் கேட்டு தலைவி மகிழ்கிறாள்.
 
Download As PDF

No comments:

Popular Posts