சுரேஷ் ஜோகிம்-மீராஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த கின்னஸ் படம் சிவப்பு மழை. 12 நாட்களில் உருவாக்கப்பட்ட படம் இது. ஒருபுறம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்டாலும், மறுபுறம் ஈழ விடுதலை போராட்டத்தின் வலி¬யையும் சொல்லிய படம் அது. (அதை முழுமையாக சொல்லியிருக்கிறார்களா என்பது வேறு விஷயம்) படத்தின் நாயகன் சுரேஷ் ஜோகிம் ஒரு ஈழத்தமிழர் என்பதும் இப்படி ஒரு படம் அமைய காரணமாக இருந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை இலங்கையில் வெளியிட தடை விதித்துள்ளது ராஜபக்சேவின் அரசு. தமிழகத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆகிற அதே நேரத்தில் கொழும்பு போன்ற நகரங்களிலும் அப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள் விநியோகஸ்தர்கள். தமிழகத்தில் எடுக்கப்படுகிற படங்களுக்கே இந்த வரவேற்பு என்றால் இலங்கையில் நடந்த ஒரு முக்கிய பிரச்சனையை காட்டுகிற படத்துக்கு எப்படி ஒரு வரவேற்பு இருக்க வேண்டும்? ஆனால் அதற்கு வழி கொடுக்காமல் முதலிலேயே இந்த படத்தை வெளியிட முட்டுக்கட்டை போட்டிருக்கிறது அந்த அரசு. இதை எதிர்த்து போராடுகிற நிலையில் எவரும் இல்லை என்பதால், இலங்கை தவிர பிற இடங்களில் தொடர்ந்து திரையிடும் முயற்சியில் வெற்றி கண்டு வருகிறார் சுரேஷ் ஜோகிம். |
Tuesday, April 27, 2010
சிவப்பு மழை படத்திற்கு இலங்கையில் தடை!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்...
-
கே ரளத்திலிருந்து கிளம்பி வந்தார் அந்த நடிகை. சேட்டன் பூமியில் சில்மிஷ படங்களில் நடித்திருந்தார். இதனாலேயே அவரின் கவர்ச்சியைப் பார்த்த பிற...
-
T he young band “Chimes of the 70s” completed a successful year in the music scene in January and the leader 18-year-old Rukshan Karu...
-
பாரதியின் தேசிய கீதங்கள் பாடலில் பாரததேசம் பாடல் பகுதியில், ‘வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் அடிமேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்...’ ...
-
I nspired by the tremendous following of live concerts held in Sri Lanka and the overwhelming talent in the country a newly formed product...
-
த மிழ் மொழி தொன்மை யான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டு ள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் இல...
-
தமிழனுக்கென்று ஒரு தேசம் இல்லையாயினும் இன்று உலகெங்கும் அவனில்லாத நாடே இல்லை எனுமளவுக்கு பரந்து வாழ்வது நம்மெல்லோருக்கும் தெரியும். தமிழகம்...
1 comment:
இதை எதிர்த்து போராடுகிற நிலையில் எவரும் இல்லை
\\\\\இருந்ததையும் அளித்து விட்டார்களே\\\\\\\
Post a Comment